கஞ்சா விற்ற 13 பேர் கைது


கஞ்சா விற்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 10:44 PM IST (Updated: 4 April 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 13 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை டவுன் மற்றும் கிழக்கு போலீசார் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை காட்டம்பூண்டியை சேர்ந்த மதன்குமார் (வயது 21), பிரகாஷ் (19), சீலப்பந்தல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (21), வேங்கிக்கால் புதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), எடப்பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் (21) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 6 பேரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர். 

அதேபோல் காட்டாம்பூண்டியை சேர்ந்த மதன்ராஜ் (21), திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அனீப் (24), கார்த்திக் (23), தந்தை பெரியார் நகரை சேர்ந்த ராபின்ராய் (23), பூமாந்தாகுளம் தெருவை சேர்ந்த ஆஷா (35), தண்டராம்பட்டை சேர்ந்த தனுஷ் (20), மற்றொரு தனுஷ் (19) ஆகிய 7 பேரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

Next Story