திருப்பத்தூரில் சரக்கு வேனில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள்


திருப்பத்தூரில் சரக்கு வேனில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 4 April 2022 10:55 PM IST (Updated: 4 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சரக்கு வேனில் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூர்

ஜவ்வாது மலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மினிவேன் கவிழ்ந்து 11 பேர் இறந்தனர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்று  அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்  திருப்பத்தூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும்  இலக்கிய, புத்தக கண்காட்சிக்கு கந்திலி ஒன்றியம் பரதேசி பட்டியில் இருந்து அரசு பள்ளி மாணவ- மாணவிகளை சரக்கு வேனில் வேனில் அழைத்து வந்தனர்.

இதுபோன்று சரக்கு வாகனங்களில் மாமவர்களை ஏற்றி சென்று விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story