மாரண்டஅள்ளி அருகே பிளஸ்1 மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபர் கைது 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


மாரண்டஅள்ளி அருகே பிளஸ்1 மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபர் கைது 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 April 2022 11:04 PM IST (Updated: 4 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே பிளஸ்-1 மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது22). இவரது நண்பர்கள் மூர்த்தி (20), சேகர் (27), சந்தோஷ் (22), மனிகண்டன் (32). இவர்கள் நேற்று இரவு மது போதையில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி, ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story