சீரியம்பட்டி அரசு பள்ளி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் மாணவர்களுக்கு மூச்சு திணறல் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகிறது


சீரியம்பட்டி அரசு பள்ளி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் மாணவர்களுக்கு மூச்சு திணறல் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகிறது
x
தினத்தந்தி 4 April 2022 11:04 PM IST (Updated: 4 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

சீரியம்பட்டி அரசு பள்ளி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் புகையால் மாணவர்களுக்கு மூச்சு திணறல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகிறது.

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் சுற்றுவட்டார  பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பள்ளியின் அருகே கொண்டு வந்து கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு மூச்சு திணறல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதனால் பள்ளி அருகில் கழிவுகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story