ஊத்தங்கரை அருகே இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு


ஊத்தங்கரை அருகே இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 April 2022 11:05 PM IST (Updated: 4 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 37). இவரது மனைவி சிவசக்தி (31). இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் சிவசக்தி தனது பெற்றோர் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தார். கடந்த 1-ந் தேதி வேல்முருகன் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிவசக்தி, பழனிசாமி, செல்வம், நவீன், வேல்முருகன், லோகநாதன், லட்சுமி ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story