ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், மோப்பநாய் சிம்பா சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் சோதனையிட்டனர். பஸ்சில் பொருட்கள், பைகள் வைக்கும் இடத்தில் இருந்த பை ஒன்றில் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன.
10 கிலோ கஞ்சா பறிமுதல்
அந்த பை யாருடையது என்று போலீசார் பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் விசாரித்தனர். பயணிகள் அனைவரும் அந்த பை தங்களுடையது இல்லை என்று தெரிவித்தனர். அதையடுத்து மோப்பநாய் சிம்பா பஸ்சிற்குள் அழைத்து வரப்பட்டு அந்த பையை மோப்பம் பிடித்தது. சிறிதுநேரத்தில் சிம்பா பஸ்சில் அமர்ந்திருந்த வாலிபரின் அருகே நின்று தொடர்ந்து குரைத்தது. அதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த யுவராஜ் (வயது 21) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து கஞ்சா பாக்கெட்டுகள் வாங்கி திருப்பதி வழியாக விழுப்புரம் மாவட்டத்துக்கு பஸ்சில் கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் யுவராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story