பாகலூரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


பாகலூரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 April 2022 11:05 PM IST (Updated: 4 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

பாகலூரில்கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூரில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவில், பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும், கர்நாடக எல்லையான மாலூர், மாஸ்தி, சம்பங்கிரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பாகலூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு, குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருகிற 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story