தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி சாவு கிராமமக்கள் சாலை மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி இறந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி இறந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொழிலாளி சாவு
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள காடுலக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவப்பா என்பவரது மகன் ராஜா (வயது26). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு ராஜா தனது அண்ணன் மனைவி முனிரத்தினம்மா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மரக்கட்டா காப்புக்காட்டில் எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது அண்ணி லேசான காயம் அடைந்தார். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று தொழிலாளியின் உடல் தேன்கனிக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது.
சாலை மறியல்
அப்போது சாலை விபத்தில் உயிரிழந்த ராஜா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்பகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story