ராமேசுவரத்தில் திடீர் மழை


ராமேசுவரத்தில் திடீர் மழை
x
தினத்தந்தி 4 April 2022 11:06 PM IST (Updated: 4 April 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

கோடைவெயில் உக்கிரமாக இருந்து வரும் நிலையில் பெய்த இந்த திடீர் மழையால் ராமேசுவரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரையிலும் இடைவிடாமல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பஸ் நிலையம் செல்லும் சாலையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சாலை முழுவதும் மழைநீர்  குளம்போல் தேங்கி நின்றது.
இதனால் வாகனங்கள் அனைத்தும் மழை நீரில் தத்தளித்தபடி சென்றன.  ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், மழைநீரை உடனடியாக நகராட்சி பணியாளர்கள் மூலம் மோட்டார் வைத்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.
கோடைவெயில் உக்கிரமாக இருந்து வரும் நிலையில் பெய்த இந்த திடீர் மழையால் ராமேசுவரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story