ஆம்பூரில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


ஆம்பூரில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 11:23 PM IST (Updated: 4 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வேன் விபத்தில் டிரைவர் மற்றும் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும், தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தரக்கோரியும் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மாநில செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் நாகப்பன் வரவேற்று பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்செல்வன், பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story