பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாணியம்பாடி
நாட்டறம்பள்ளி ஒன்றியம் தும்பேரி கூட்ரோடு பகுதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி தலைவர் சக்திபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலத்துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா பங்கேற்று ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். ஒரு இருசக்கர வாகனத்துக்கும், கியாஸ் சிலிண்டருக்கும் மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story