ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி விசைத்தறி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி விசைத்தறி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 April 2022 12:08 AM IST (Updated: 5 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி விசைத்தறி தொழிலாளி குடும்பத்துடன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்:
விசைத்தறி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா காடச்சநல்லூர் அருகே உள்ள ஏரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜம்மாள் (38). இவர்களுக்கு பிரவீன் (19) என்ற மகன் உள்ளான்.
இவர்கள் 3 பேரும் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். நுழைவு வாயில் அருகே திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து எடுத்து வந்த கேன்களில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து காப்பாற்றினர். பின்னர் விசாரணைக்காக அவர்களை நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பரபரப்பு
அவர்கள் கலெக்டரிடம் கொடுக்க கொண்டு வந்த மனுவில், தங்களது குடும்பத்தை, பொய்யான குற்றச்சாட்டின் பேரில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதால், தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்து இருந்தனர். மேலும் தங்களது குடும்பத்தை ஊரை விட்டு துரத்த சூழ்ச்சி நடைபெறுவதாகவும், அதற்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்துடன் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story