இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை-கலெக்டரிடம் மனு


இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை-கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 April 2022 12:08 AM IST (Updated: 5 April 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாமக்கல்:
வளையப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கை தமிழர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களது முகாமில் சுமார் 25 பேருக்கு மேல் வளையப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்று உள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தபின்பு, முகாமில் வசிக்கும் மக்கள் வங்கிக்கு சென்று நகைக்கடன் தள்ளுபடி செய்தது தொடர்பாக கேட்டோம். அதற்கு வங்கி மேலாளர் முகாம் மக்களுக்கு எந்தவித அரசு உத்தரவும் வரவில்லை என்றார். இதையடுத்து கடந்த 30-ந் தேதி அனைவரும் வங்கிக்கு சென்று கேட்டதற்கு 2 நாட்கள் கழித்து 15 பேரின் பெயர்களை கொடுத்து, அவர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவத்தை வழங்கி, இதனை பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறி அனுப்பிவிட்டனர். இதே மாவட்டத்தை சேர்ந்த பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story