திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம்:
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், இருசக்கர வாகனத்திற்கு வெள்ளை துணி போர்த்தியும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், பள்ளிபாளையம் அருணாச்சலம், நகர தலைவர்கள் ஜானகிராமன், ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் மல்லை கிருஷ்ணன், அல்லிமுத்து, காசிவிஸ்வநாதன், குமாரபாளையம் தங்கராஜ், காமாட்சி, பேரூராட்சி தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story