17 வயது சிறுமி கடத்தல்; தொழிலாளி கைது
17 வயது சிறுமியை கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மோகனூர்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் முரளி (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை முரளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மோகனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், முரளி ஆழியாறுவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
Related Tags :
Next Story