பரமத்திவேலூர் அருகே விபத்தில் தொழிலாளி சாவு
பரமத்திவேலூர் அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளி பலியானார்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் சிமெண்டு குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். விநாயகர் கோவில் அருகே முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென பிரேக் போட்டதால் சங்கர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கர் பலியானார். விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story