பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின், லாலாப்பேட்டை கிளை சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாமம் போட்டு, மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் எல்.சி.மணி கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, நிறைவுரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வு ஆகியவற்றை வாபஸ் பெறக்கோரியும், சுங்கச் சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரியும், மாநில அரசு சொத்து வரி உயர்வை திரும்பப்பெற கோரியும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story