விருதுநகர் பாலியல் வழக்கில் கைதான 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு

விருதுநகர் பாலியல் வழக்கில் கைதான  4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 5 April 2022 12:30 AM IST (Updated: 5 April 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 
சி.பி.சி.ஐ.டி. காவல் விசாரணை
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில்  8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ளனர்.
 இந்த நிலையில் மதுரை சிறையில் இருந்த 4 பேரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு வழங்கிய 7 நாள் அனுமதி நேற்றுடன் முடிந்தது. எனவே 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தினர். 
விசாரணை அறிக்கை 
பின்னர் அவர்கள் 4 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.  மேலும் 4 பேரிடமும் விசாரணை நடத்திய விசாரணை அறிக்கை, ஆவணங்கள், தடயங்கள் ஆகியவற்றை இரும்புப்பெட்டியில் வைத்து கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரும் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Next Story