மாற்றுத்திறனாளி பள்ளிக்குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளி பள்ளிக்குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 106 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு தகுந்த மருத்துவர்கள் மமூல் ஆய்வு, மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள், சிகிச்சைகள், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், பெங்களூரில் உள்ள அலிம்கோ நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு தேவைப்படும் செயற்கை கால், கை போன்ற உறுப்புகளுக்கான அளவீடு செய்யும் பணிகளும் நடத்தப்பட்டது. விரைவில் அவர்களுக்கான உபகரணங்கள் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளில் 20 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கவும், 8 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளும், 36 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களும், காதொலிக்கருவிகள் 16 குழந்தைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story