ஆர்ச்சம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்


ஆர்ச்சம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 5 April 2022 1:05 AM IST (Updated: 5 April 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஆர்ச்சம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டியில் தூய்மை பாரத இயக்கம், நீர் மேலாண்மை இயக்கம் சார்பில்  எழில்மிகு கிராமத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் கிராம மக்களுடன் சுகாதார நடை பயணம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா கோவிந்தராஜன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் தோகைமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம் முன்னிலை வகித்தார். 
ஊர்வலமானது ஆர்ச்சம்பட்டி கடை வீதியில் இருந்து புறப்பட்டு பஸ் நிறுத்தம் உள்பட  பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.  இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கழிவுநீர் தேங்கக்கூடாது, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, பொதுஇடங்கள், கல்வி வளாகங்கள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். 

Next Story