வாகன உதிரி பாக கடையில் பயங்கர தீ விபத்து


வாகன உதிரி பாக கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 5 April 2022 1:30 AM IST (Updated: 5 April 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில், வாகன உதிாி பாக கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டையில், வாகன உதிாி பாக கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பயங்கர தீ விபத்து
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் பின்புறம் வாகன உதிரி பாகங்களை இருப்பு வைத்து இருந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் இந்த கடையை திறக்க உரிமையாளர்கள் வந்தனர். 
அப்போது கடையின் குடோனில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், குடோனுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஆயில் மற்றும் உதிரிபாகங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
3 மணி நேரம் போராட்டம்
இது குறித்து கடை உரிமையாளர்களில் ஒருவரான மங்கள்ராம் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்கு தீயை அணைக்கும் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் நன்பகல் 11 மணி வரை 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இந்த கடையின் மாடியில் 2 குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் தடுத்து அவா்களை அப்புறப்படுத்தி பிற கடைகளுக்கு தீ மேலும் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 
ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கணேசன் நேரில் வந்து தீயணைப்பு பணிகளை பார்வையிட்டார். மின்கசிவு காரணமாக வாகன உதிரி பாக கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Next Story