நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சோலார் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஈரோடு சோலார் அருகே மொடக்குறிச்சி சாலை (ஈரோடு -மூலனூர் ரோடு) பகுதியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில் நேற்று சோலார் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலை ஆய்வாளர்கள் சாந்தி, கல்விக்கரவி, வினோத்குமார் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story