புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா ரகுநாதபுரம் கிராமத்தில் கல்லணை கிளை பாசன வாய்க்கால்மற்றும் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். தற்போது இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழியின்றி தேங்கிய நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த வாய்க்கால் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், ரகுநாதபுரம்.
Related Tags :
Next Story