ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் மலைப்பாதை படிக்கட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலைப்பாதை படிக்கட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் விஷம் குடித்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 59). நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி ரோஷினி (52). இவர்களுக்கு நிகிதா(23), கார்த்திகா(15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ரவீந்திரன் தனது மனைவி, மகள்களுடன் மதுரை திருப்பரங்குன்றம் வந்து, அங்கு மலைக்கு செல்லக்கூடிய புதிய படிக்கட்டு பாதைக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு இடத்தில் 4 பேரும் விஷம் குடித்தனர். இதனால் சிறிதுநேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
தீவிர சிகிச்சை
இந்த நிலையில் அங்கு வந்த ஒருவர் இதை பார்த்து, திருப்பரங்குன்றம் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ரோஷினி மட்டும் கவலைகிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் ரவீந்திரன் கடன் தொல்லையால் சமீபகாலமாக மன உளைச்சலில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. ஆகவே ரவீந்திரன் தனது குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story