கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சேலம்:-
சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், குமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாநகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story