மாநகராட்சி பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு பயிற்சி
மாநகராட்சி பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு பயிற்சி
மதுரை
மதுரை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கவுன்சிலர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம், பரவையில் நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களுக்கு மாநகராட்சியில் உள்ள துறைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் கடமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதில் துணை கமிஷனர் சங்கீதா, நகர் பொறியாளர் அரசு, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர்கள் ரமேஷ், அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், தட்சிணாமூர்த்தி, உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி, செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story