பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆம் ஆத்மியில் இணைந்தார்


பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆம் ஆத்மியில் இணைந்தார்
x
தினத்தந்தி 5 April 2022 2:12 AM IST (Updated: 5 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், ஆம் ஆத்மியில் இணைந்தார்.

பெங்களூரு:

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர் ராவ் சந்தித்தார். பின்னர் அவர் தன்னை ஆம் ஆத்மியில் இணைத்துகொண்டார்.

  இதைத்தொடர்ந்து டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கர் ராவ் கூறியதாவது:-
  நான் 32 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ வீரராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளேன். அனைத்து கட்சிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கெஜ்ரிவால் மாதிரி தான் தலைவர் இந்தியாவுக்கு தேவை என்பதை நான் நம்புகிறேன். டெல்லி அரசு பள்ளிகள் மற்றும் மொகல்லா அரசு ஆஸ்பத்திரிகளை பார்த்த நாளன்று ஆம் ஆத்மியில் இணைய முடிவெடுத்தேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story