பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் கலெக்டரிடம் மனு
பெரியார் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், உதவி பேராசிரியர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தனர்.
சேலம்:-
சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறி கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர் மீது சூரமங்கலம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் எந்த மாணவியையும் பாலியல் தொந்தரவு செய்தது கிடையாது. சிலரின் தூண்டுதலின்பேரில் உதவி பேராசிரியர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடு அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story