மக்கள் குறைதீர்க்கும் நாளில் ரூ.6¼ லட்சம் நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.6 லட்சத்து 33 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அதன்படி முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்ளிட்ட 447 மனுக்கள் பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பில் செல்போன்கள் மற்றும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 மதிப்பில் 3 சக்கர சைக்கிள்கள், 3 பேருக்கு தலா ரூ.4,500 மதிப்பில் தையல் எந்திரங்கள் என மொத்தம் 19 பேருக்கு ரூ.6 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்கள்
போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story