மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய குழு, நகர குழு சார்பில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். கட்சியின் நகர செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, அதன் முன்பு தேங்காய் உடைத்து, பழம் வைத்து, ஊது பத்தி, சூடம் ஏற்றினர். மேலும் அவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்ைவ கண்டித்து மோட்டார் சைக்கிள், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதேபோல் குன்னம் பஸ் நிலையத்தில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்தும், கியாஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து பாடியும், நான்கு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story