பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அகவொளி சோலை என்கிற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அற்புதம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், பள்ளி அருகே சட்டவிரோதமாக நடந்த மதுவிற்பனை குறித்து மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கவரம்பட்டியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சங்கரை விராலிமலை போலீசார் 3 பேர் லத்தியால் தாக்கினர். மேலும் அவரை இன்ஸ்பெக்டர் திட்டியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த 3 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்தும், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார். மேலும் சங்கரை தாக்கிய போலீசாரையும், திட்டிய இன்ஸ்பெக்டரையும் தமிழக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும், என்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களில் சிலர் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணியை சந்தித்து ஒரு மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story