நெல்லையில் காங்கிரசார் நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் நூதன போராடம் நடத்தினர்.
நெல்லை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் ஏழை மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரசார் நேற்று தச்சநல்லூர் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினா். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோல் கேனுக்கு மாலை அணிவித்து, அதனை பெண்கள் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக சென்று காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட துணை தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ளபாண்டி, பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காவல்கிணறு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயலாளர் எஸ்.ஜோதி, வள்ளியூர் வட்டார தலைவர் அருள்தாஸ், மாவட்ட துணை தலைவர் மாடசாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பணகுடி நகர காங்கிரஸ் தலைவர் எட்வின், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சிங்கராஜா, வள்ளியூர் அல்போன்ஸ் ராஜா, சிங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கிருஷ்ணராஜா நன்றி கூறினார். முன்னதாக அவர்கள் பேரணியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Related Tags :
Next Story