ஸ்டூடியோவுக்குள் புகுந்து கேமராக்கள் திருடிய வாலிபர் கைது


ஸ்டூடியோவுக்குள் புகுந்து கேமராக்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 4:19 PM IST (Updated: 5 April 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டூடியோவுக்குள் புகுந்து கேமராக்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள மடையப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரகாஷ் (வயது 35). இவர், குஜிலியம்பாறை அருகே உள்ள தி.கூடலூரில் போட்டோ ஸ்டூடியோ மற்றும் கணினி மையம் வைத்துள்ளார். கடந்த 2-ந்தேதி இரவு ஆனந்தபிரகாஷ் வழக்கம்போல் தனது ஸ்டூடியோவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்தார். அப்போது ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஸ்டூடியோவில் இருந்த 2 கேமராக்கள், பிளாஷ் லைட், சார்ஜர் பேட்டரி, ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
இந்தநிலையில், குஜிலியம்பாறை அருகே பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர் கரூர் சின்னான்டான்கோவில் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 26) என்பதும், ஆனந்தபிரகாசின் ஸ்டூடியோவுக்குள் புகுந்து கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலிசார் பிரதீப்பை கைது செய்து, அவரிடம் இருந்து 2 கேமராக்கள் மற்றும் பிளாஷ் லைட், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பிரதீப் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story