வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2022 6:39 PM IST (Updated: 5 April 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

போளூர்

போளூர் அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்  தேவேந்திரன், விவசாயி. இவரது மகன் விஜயகுமார் (வயது 23) டிரைவராக வேலை செய்து வந்தார். 

திருமணம் ஆகாதவர். இவர் சம்பாதிக்கும் பணத்தை மதுகுடித்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை பெற்றோர்கள் கண்டித்தும் செல்வுசெய்வதை நிறுத்தவில்லை. 

இந்த நிலையில் நேற்றும் விஜயகுமாரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜயகுமார் விஷத்தை குடித்து விட்டார்.

 உடனடியாக அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின்பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story