20 லட்சம் செங்கல் உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: சங்க செயலாளர் பேட்டி


20 லட்சம் செங்கல் உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: சங்க செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 5 April 2022 7:11 PM IST (Updated: 5 April 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

அனல் மின்நிலையங்களில் இருந்து செங்கல் உற்பத்திக்கு உலர் சாம்பல் வினியோகம் நிறுத்தப்பட்டு இருப்பதால், 20 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சசிதர் தெரிவித்தார்.

தூத்துக்குடி:
அனல் மின்நிலையங்களில் இருந்து செங்கல் உற்பத்திக்கு உலர் சாம்பல் வினியோகம் நிறுத்தப்பட்டு இருப்பதால், 20 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சசிதர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலர் சாம்பல் நிறுத்தம்
தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களிலில் இருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பல் 20 சதவீதத்தை செங்கல்சூளை நிறுவனத்துக்கு இலவசமாக கொடுத்து வந்தனர். சமீபகாலமாக இலவசமாக தரப்படும் உலர் சாம்பல் நிறுத்தப்பட்டு உள்ளது. அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிகளின்படி உலர் சாம்பலை ஏலம் விடுவதற்கு வழிவகை செய்து உள்ளனர். உலர் சாம்பலை ஏலம் விடுவதால் சிறு நிறுவனங்கள் தான் பாதிக்கப்படும். இதனால் பெரும் நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் லாபம் அடைவார்கள். ஆனால் உலர் சாம்பல் ஏலம் விடப்படும் போது அதில் கலந்து கொள்ளும் அளவுக்கு சிறு குறு நிறுவனங்களுக்கு நிதி பொருளாதார வசதி கிடையாது. எனவே பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
20 லட்சம் தொழிலாளர்கள்
தற்போதே பல நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிலை நிறுத்தி விட்டன. இந்த நிலை தொடர்ந்தால் தொழிலை தொடர முடியாத நிலை ஏற்படும். இந்தியா முழுவதும் 20 ஆயிரம் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் 3 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. இந்த உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். ஆகையால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து உலர்சாம்பலை, சிறு குறு நிறுவனங்களான எங்கள் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரவி, பொருளாளர் அருள் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்

Next Story