ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகள் அச்சத்துடன் வருகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கோவிலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோவிலூர் கிளை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், கிளை செயலாளர் அருள்முருகன், நிர்வாகிகள் ஹரிஹரன், லோகேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்களை சீரமைப்பதுடன், அங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும். கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story