மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
கூடலூர்
மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஜீப் மோதியது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஆகாஷ்(வயது 18). இவரது நண்பர், கோவையை சேர்ந்த ரூபன் (20). கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் இன்று கோவையில் இருந்து ஊட்டி வழியாக கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ரூபன் ஓட்டினார். பைக்காரா 9-வது மைல் பகுதியில் வந்தபோது நடுவட்டத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற ஜீப் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ஆகாஷ், ரூபன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ஆகாஷ் பரிதாபமாக பலியானார்.
தீவிர சிகிச்சை
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய ரூபனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த பைக்காரா போலீசார், ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story