நகராட்சி அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு


நகராட்சி அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு
x
தினத்தந்தி 5 April 2022 8:20 PM IST (Updated: 5 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் புதிதாக திறக்கப்பட்ட நகராட்சி அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தாா்.

விழுப்புரம், 

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நகராட்சி நூற்றாண்டு விழா 2019–20 சிறப்பு நிதியின் கீழ் ரூ.4 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. வானூரை அடுத்த ஒழிந்தியாம்பட்டில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் இன்று மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நகரமன்ற தலைவர், ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் அறைகள் மற்றும் நகரமன்ற கூட்டம் நடைபெறும் அரங்கு ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது துரை. ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகராட்சி தலைவர் சக்கரை தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை மற்றும் அனைத்து நகரமன்ற கவுன்சிலர்களும் உடனிருந்தனர்.

Next Story