மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு   போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 8:34 PM IST (Updated: 5 April 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக அலுவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் அஜீத்குமார் (வயது 23). இவர் குடிநீர் கேன்கள் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேன் டிரைவரான வேலை செய்து வருகிறார். இவருக்கும், தாடிக்கொம்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி அஜீத்குமார் கடத்தி சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜமால் முகமது, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அஜீத்குமாரை கைதுசெய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

Next Story