கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 2.75 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 2.75 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது. இந்த நிலையில் கர்நாடக அரசு தனது ஊழியர்களுக்கு 2.75 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அதாவது அகவிலைப்படி 24.50 சதவீதத்தில் இருந்து 27.25 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கர்நாடக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் சுமார் 7 லட்சம் ஊழியர்கள் மற்றும் 3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு அரசின் முழு நேர ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story