தொழில் வளர்ச்சியில் கர்நாடகத்துடன் தெலுங்கானா போட்டி- டி.கே.சிவக்குமார் பேட்டி


தொழில் வளர்ச்சியில் கர்நாடகத்துடன் தெலுங்கானா போட்டி- டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 5 April 2022 8:54 PM IST (Updated: 5 April 2022 8:54 PM IST)
t-max-icont-min-icon

தொழில் வளர்ச்சியில் கர்நாடகத்துடன் தெலுங்கானா போட்டி- டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாங்கள் ஆட்சியில் இருந்தபோது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பெரிய முதலீட்டாளர்களை கர்நாடகத்திற்கு அழைத்து வந்தோம். சர்வதேச விமான நிலைய தொடக்க விழாவுக்கு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் வந்தார். அவர் பேசும்போது, உலக தலைவர்கள் முதலில் பெங்களூரு வந்து பிறகு பிற நகரங்களுக்கு செல்லும் அளவுக்கு இங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
தெலுங்கானா மாநிலம் கடந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதனால் அந்த மாநிலம் கர்நாடகத்துடன் வளர்ச்சியில் போட்டி போடுகிறது. பெரிய தொழில் முதலீட்டாளர்களை அந்த மாநிலத்தினர் ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். 

கர்நாடகத்தில் தற்போது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்குங்கள் என்று தெலுங்கானா அழைக்கிறது. பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம், இங்கேயே தொழில் மேற்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. தொழில் முதலீடுகளை அதிகரித்து அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குவது தான் எனது நோக்கம். தகவல்-உயிரி தொழில்நுட்பத்தின் தலைநகரமாக பெங்களூரு திகழ்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பா.ஜனதா கூறியது. அந்த வாக்குறுதியை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story