கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 3,000 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும்-மந்திரி பி.சி.நாகேஸ்
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 3,000 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்
பெங்களூரு: கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 3,000 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
3,000 பள்ளிகள்
கன்னட சாகித்ய பரிஷத் சார்பில் கன்னட பள்ளிகளை பாதுகாத்து கன்னட மொழியை வளர்க்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்து கொண்டு அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் அரசு மாதிரி பள்ளிகளை தொடங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நடப்பு ஆண்டில் 3,000 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். பப்ளிக் பள்ளிகளை புதிதாக தொடங்கும் திட்டம் இல்லை. ஆங்கிலம் நல்ல முறையில் கற்பிக்கப்படும். ஒரு வகுப்பிற்கு ஒரு அறை, ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார். ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தொந்தரவுகள் சரிசெய்யப்படும்
அதை தடுக்கும் பொருட்டு தரமான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இது கிராம பஞ்சாயத்து அளவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பப்ளிக் பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கன்னட வழியில் படிக்கும் குழந்தைகள் ஆங்கில வழியில் வந்து சேருகிறார்கள். பாடப்புத்தகங்களை அச்சிடும் செலவு அதிகமாக உள்ளது.
ஆனாலும் தொடக்க கல்வியில் ஆங்கில வழி கல்வியை நாங்கள் நடத்துகிறோம். கன்னட வழி பள்ளிகளில் புத்தகங்களில் ஆங்கில புத்தகமும் வழங்கப்படுகிறது. கன்னட பள்ளிகளை போற்றி பாதுகாப்போம். அவற்றுக்கு ஆகும் தொந்தரவுகள் சரிசெய்யப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.
Related Tags :
Next Story