மாணவியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
நாகையில், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகையில், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடல் 6 நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கல்லூரி மாணவி தற்கொலை
நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி சுபாஷினி (வயது 19) கடந்த 30-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி நிர்வாகம் பருவ கட்டணம் கட்டச்சொல்லி அவமானப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
தொடர் போராட்டம்
இதனையடுத்து அந்த கல்லூரியின் தாளாளர், முதல்வர் உள்பட 3 பேர் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 30-ந் தேதி முதல் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
உடலை வாங்கி சென்றனர்
மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) சுரேஷ் கார்த்திக் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 9 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மாணவி சுபாஷினியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
பின்னர் வீட்டில் இருந்து மாணவியின் உடலை ஊர்வலமாக நாகூரில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story