சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
வேலூரில் சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
வேலூர்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சொத்துவரி உயர்த்தப்பட மாட்டாது என தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்களை பாதிக்கும் வகையில் சொத்துவரியை உயர்த்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது 150 சதவீதம் வரை சொத்துவரியை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், பி.எஸ்.பழனி, நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story