அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு .பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். கண் மருத்துவ உதவியாளர் முருகேசன் மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார். இதில் பார்வை குறைபாடு கண்டறியப்பட்ட 13 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் 441 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story