சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றம்
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ராபவுர்ணமி விழாவையொட்டி பளியன்குடியிருப்பு பகுதியில் கொடி ஏற்றப்பட்டது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடியிருப்பு பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் மலை உச்சியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலை அடையலாம். கேரள மாநிலம் குமுளியில் இருந்து ஜீப் போன்ற வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக செல்ல சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி வனத்துறையினர் ஆண்டுக்கு ஒரு முறை அனுமதி வழங்கி வருகின்றனர்.
இதனால் ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது சித்ரா பவுர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பளியன்குடியிருப்பில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பொங்கல், கற்கண்டு, அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story