வாணியம்பாடியில் 5 சாராய வியாபாரிகள் கைது. கவுன்சிலரின் கணவர் கோர்ட்டில் சரண்
வாணியம்பாடியில் 5 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கவுன்சிலரின் கணவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி. கூட்டாளிகளுடன் சாராயம் விற்று வருகிறார். சாராய விற்பனையை தடுக்க வேண்டி அப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை சாராயத்தை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மகேஸ்வரி உள்பட அவரது கூட்டாளிகளை வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வளையாம்பட்டை சேர்ந்த நவீன் (வயது 37) வாணியம்பாடி கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இவரது மனைவி செல்வி (26) நேதாஜி நகரைச் சேர்ந்த மகேந்திரன் (23), பழனி (59), சிரஞ்சீவி (29), எலி சரவணன் (26), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நவீனின் 2-வது மனைவி சோபியா. வளையாம்பட்டு ஊராட்சி கவுன்சிலர் சோபியா என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story