திருப்பூர் மாவட்டத்தில் 91 புதிய ரேஷன் கடைகள் அமைக்க அதிகாரிகள் திட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் 91 புதிய ரேஷன் கடைகள் அமைக்க அதிகாரிகள் திட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 10:19 PM IST (Updated: 5 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 91 புதிய ரேஷன் கடைகள் அமைக்க அதிகாரிகள் திட்டம்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 91 புதிய ரேஷன் கடைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
8 லட்சத்து 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள்
திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரம் ரேஷன்கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மாவட்டத்தில் அவினாசி தாலுகாவில் 81 ஆயிரத்து 390 கார்டுகளும், தாராபுரம் தாலுகாவில் 1 லட்சத்து ஆயிரத்து 227 கார்டுகளும், காங்கயம் தாலுகாவில் 79 ஆயிரத்து 742 கார்டுகளும், மடத்துக்குளம் தாலுகாவில் 37 ஆயிரத்து 648 கார்டுகளும், பல்லடம் தாலுகாவில் 80 ஆயிரத்து 485 கார்டுகளும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 917 கார்டுகளும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 32 கார்டுகளும், உடுமலை தாலுகாவில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 329 கார்டுகளும், ஊத்துக்குளி தாலுகாவில் 36 ஆயிரத்து 823 கார்டுகளும் என மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 593 ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் அரிசி வாங்கும் கார்டுகள் 7 லட்சத்து 42 ஆயிரத்து 830-ம் அடங்கும்.
மாவட்டம் முழுவதும் பட்டியலிடப்பட்டதில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிதாக 91 ரேஷன் கடைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 11 ரேஷன் கடைகளை திறக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதிய ரேஷன் கடைகள்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அனைத்து துறை அதிகாரிகளுடன் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் புதிய ரேஷன் கடைகளை அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ரேஷன் பொருட்களை வழங்கும் பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளதால் புதிய ரேஷன் கடைகள் அமைப்பதில் சுணக்கம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை களைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரேஷன் கடைகளை அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story