வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 5 April 2022 10:31 PM IST (Updated: 5 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. 

இவரது மனைவி தேவகி. பாபு குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். தேவகியின் தாயார் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு குடும்பத்துடன் அணங்காநல்லூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி பாபு குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றார். 

நேற்று வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த சூட்கேசை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதில் 9 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story