உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
உடுமலை,
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வருகின்ற அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கும்.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கோவில் திருவிழாக்களை நடத்திக்கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு (2022) உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடக்கிறது.
நோன்பு சாட்டுதல்
தேர்த்திருவிழாவையொட்டிநேற்று மாலை பூச்சொரிதல் நடந்தது. இதில் மாரியம்மனுக்குசிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து பெண்கள் மலர் கூடைகளை எடுத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது விநாயகர், பாலமுருகன் மற்றும் அஷ்ட நாகர்களுக்கு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு மலர் அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்துநோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.நிகழ்ச்சிக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், அனுஷம் யு.எஸ்.சஞ்சீவ்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் யு.கே.பி.எம்.கார்த்திகேயன், ஏ.கனகராஜ், பிரசன்ன விநாயகர் கோவில் முன்னாள் அறங்காவலர் ஏ.சோமசுந்தரம், தேவாங்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஏ.சீனிவாசன், அறங்காவலர் ஆர்.கிருஷ்ணராஜ், வி.பி.எஸ்.ஆர்.பிரகாஷ், துரை கியாஸ் ஏஜன்சீஸ் ஏ.துரைசாமி, வி.ஆர்.வேலுச்சாமி, சிவரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 12-ந்தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் (நடுதல்) நிகழ்ச்சியும், 14-ந்தேதி இரவு 12 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகளும், 15-ம்தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், 2 மணிக்கு பூவோடு ஆரம்பம் நிகழ்ச்சியும், 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டம்
20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும், 21-ந்தேதி காலை 6.45மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு ஸ்ரீலலிதா திரிசதி நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பரிவேட்டை, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
23-ந்தேதி காலை 8.15 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மகாபிஷேகமும், இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 15-ந்தேதி முதல் தினசரி மாலை 7.30 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறும். 15-ந்தேதி முதல் தினசரி மாலை கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
Related Tags :
Next Story